செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2019 (10:50 IST)

கொட்டும் மழையிலும் மோட்டார் பயணத்தை தொடங்கிய ஜக்கி வாசுதேவ்..

காவிரி நதியை மீட்பதற்காக மோட்டார் வாகன பயணத்தை மேற்கொண்டுள்ள ஜக்கி வாசுதேவ், மழை என்றும் பொருட்படுத்தாமல் தனது பயணத்தை தொடங்கினார்.

காவிரி நதியை மீட்பதற்காக ‘காவிரி கூக்குரல்” என்ற இயக்கத்தை “ஈஷா” மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கினார். இந்த இயக்கம் தமிழகம் முழுவது உள்ள காவிரி வடிநில பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் 12 ஆண்டுகளுக்குள் 242 கோடி மரங்களை நடுவதாக இலக்கு நிர்ணயித்தது.

இதன் முதன் முயற்சியாக ஜக்கி வாசுதேவ் கர்நாடகா மாநிலம் குடகிலிருந்து தமிழகத்தின் திருவாரூர் வரை சுமார் 1200 கி.மீ. மோட்டர் பைக்கிலேயே சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளை சந்திக்க திட்டமிட்டார். அதன் படி நேற்று கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள காவிரியின் மூலமான தலைகாவிரியிலிருந்து மோட்டார் பயணத்தை தொடங்கினார். அவர் கிளம்பியபோது மழை பெய்யத்தொடங்கியது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் அவர் தனது மோட்டார் பயணத்தை தொடங்கினார்.

ஜக்கி வாசுதேவ் இன்று மாலை ஹூன்சுருக்கு சென்றடைகிறார். அதன் பின்பு மைசூர், மாண்டியா, ஓசூர், தர்மபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை, ஆகிய பகுதிகள் வழியாக திருவாரூர் செல்கிறார். பின்பு 15 ஆம் தேதி சென்னைக்கு வந்தடைந்து தனது மோட்டார் பயணத்தை நிறைவு செய்வார் என கூறப்படுகிறது.