1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (11:55 IST)

செந்தில் பாலாஜி வீட்டிலும் ஐ.டி. ரெய்டு..! – பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமானவரி துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க 4 நாட்களே உள்ள நிலையில் திமுக பிரமுகர்கள் வீடுகளில் தொடர்ந்து வருமானவரி சோதனை நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் காலை முதலாக வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவினர் மீது திட்டமிட்டு வருமானவரி சோதனை நடத்தப்படுவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக செந்தில் பாலாஜி குறித்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை மிரட்டும் வகையில் பேசியதும், அதற்கு திமுக எம்.பி கனிமொழி எதிர்வினையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.