திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (08:37 IST)

மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி கட்டாயம்: தமிழ்நாடு அரசு உத்தரவு..!

தமிழகத்தில் மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 
 
வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சூரியசக்தி மின் வேலிகள் உள்பட அனைத்து மின் வேலிகள் அமைப்பதற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு பதிவு தெரிவித்துள்ளது
 
மேலும் ஏற்கனவே மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தால் அதனை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின் வேலிகள் அமைப்பு என்பது காப்பு காடுகளில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயி நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மின் வேலிகள் அமைக்கும் வணிகத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வனப்பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஏற்கனவே வேலிகள் அமைத்து இருந்தால் அவர்கள் உடனடியாக வன அலுவலரிடம் வேலிகள் அமைத்தது குறித்து பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva