செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (09:12 IST)

இது TNPSC தேர்வா? இல்லை, DMKPSC தேர்வா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..!

டிஎன்பிஎஸ்சி தேர்வு தாளில் தமிழக முதல்வரின் திட்டம் குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது TNPSC தேர்வா? அல்லது DMKPSC  தேர்வா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TNPSC குரூப் 2 குரூப் 2ஏ பணிகளை நிரப்புவதற்கு மெயின் தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது . இந்த தேர்வு தாளில் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக முதலமைச்சரை தாயுமானவர் என்று அழைக்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு விடையாக ஐந்து ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் காலை உணவு, விடியல் பயணத் திட்டம், நீங்கள் நலமா, மக்களுடன் முதல்வர், விடை தெரியவில்லை ஆகிய இந்த ஐந்து பதில்களில் ஒன்று சரியான ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஜெயக்குமார் இது TNPSC தேர்வா? இல்லை DMKPSC தேர்வா? தேர்வா என குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva