தொடர்புடைய செய்திகள்
- LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
- இந்தியும் தமிழும்தான் எங்க உயிர்.. சாரி.. தப்பா சொல்லிட்டேன்! - திமுக வேட்பாளார் பேச்சால் பரபரப்பு!
- ஈரோட்டில் அனுமதியின்றி பிரச்சாரம்; சீமானுக்கு செக்! - தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
- சுயேட்சையா கூட நிக்க விடல.. கடைசி நேரத்தில் திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம்! - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. 8 வேட்பாளர்கள் வாபஸ்.. எத்தனை பேர் போட்டி?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, பாஜக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல் புறக்கணித்திருந்தன. இதனால், ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய முன்னிலை நிலவரப்படி, திமுக வேட்பாளர் சந்திரகுமார் 5,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 489 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 5,000-க்கு மேல் அதிகமாக உள்ளது.
இதனால், ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Mahendran
