1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 அக்டோபர் 2021 (20:08 IST)

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் திடீர் மாற்றமா?

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் அக்டோபர் 12ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனையின் போது நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு என்பதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது
 
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தாலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தவில்லை என்பதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஆகலாம் என்று கூறப்பட்டு வருகிறது