வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (21:47 IST)

ஐபிஎல் இலவச பேருந்து பயணம் - தேர்தல் ஆணையத்தில் புகார்!

ipl 2024
ஐபிஎல் போட்டி வருகைக்காக ரசிகர்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
ஐபிஎல்-2024  சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.   நாளை இரவு எட்டு மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
 
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள்ளேயே விற்றுத் தீர்ந்தது. 

இந்த நிலையில்,  இந்த முறை சென்னை சேப்பாக்கம் மைதானம் வழியாக இயங்கும் பேருந்துகளில் போட்டியை பார்க்க செல்பவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல்  நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டி வருகைக்காக ரசிகர்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது பற்றி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
அதில், ஐபில் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அறிவிப்பு என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.