1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (07:11 IST)

கோவையில் இன்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் கலந்து கொள்கிறார்!

கோவையில் இன்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அந்த மாநாட்டில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் 34 ஆயிரத்து 723 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த ஒப்பந்தம் காரணமாக தமிழகத்தில் சுமார் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தற்போது கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் சுமார் 4000 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்களை அவர் தொடங்கி வைக்கிறார் என்பதும் இதன் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 13 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 13 நிறுவனங்களுக்கு இன்று அவர் அடிக்கல் நாட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.