1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (18:06 IST)

த.வெ.க செயலி அறிமுகம்..! முதல் உறுப்பினராக சேர்ந்த விஜய்.!!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், தனது கழகத்தில் முதல் உறுப்பினராக சேர்ந்தார்.
 
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டிருந்தார்.
 
இந்நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்தியேக செயலியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். முதல் உறுப்பினராக அவர் இணைந்தார்.

 
தமிழக மக்களின் வெற்றிக்கான பயணத்தில் தோழர்களாக இணைந்து பயணிப்போம் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் உறுதி மொழியை படித்து கட்சியில் சேரலாம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார். QR CODE  இணைப்பை பயன்படுத்தி சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.