Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறையா? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

Updated: செவ்வாய், 28 ஜூலை 2020 (19:51 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கிட தமிழக அரசு உத்தரவிட்டது என்பது தெரிந்ததே 
 
ஆனால் ஒரு சில பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் குறித்த விபரங்கள் இல்லை என்பதால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறையை பின்பற்றலாமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரேடு முறை மதிப்பெண்களை எப்படி கணக்கிடுவார்கள்? என்ற சந்தேகத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எழுப்பி வருவதால் இந்த பிரச்சனைக்கு அரசு எப்படி தீர்வு காணப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

எல்லாம் காட்டு

ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகம் வழியாக சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி.. கடைசி நாளான இன்று வெளியான ட்விஸ்ட்..

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் இன்று மழை பெய்யுமா?

2028ல் மீண்டும் அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியா? அமெரிக்க அரசின் சட்டம் இடம் கொடுக்குமா?

மும்பை ஐஐடி வெறும் கல்வி நிலையம் அல்ல.. அது ஒரு இரண்டாவது வீடு.. மாணவரின் நெகிழ்ச்சி பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments