மருத்துவமனையின் அலட்சியத்தால் நோயாளியின் இடுப்பு எலும்புக்குள் சென்ற ஊசி !!!

Updated: செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:41 IST)
கோவையில் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளி ஒருவரின் உடலில் உடைந்த ஊசி இருப்பது ஸ்கேனில் தெரியவந்துள்ளது.

கோவை குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பிதுரை கடந்த வாரம் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு அவருக்கு ஊசிப் போடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு இடுப்புப் பகுதியில் வலி அதிகமாகி உள்ளது. இதையடுத்து வேறு மருத்துவமனைக்கு சென்ற போது அவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில் இடுப்பு எலும்புக்கு உள்ளே உடைந்த ஊசித்துண்டு ஒன்று இருந்துள்ளது.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பிதுரை தான் சிகிச்சை எடுத்துக்கொண்ட  மருத்துவமனைக்கு சென்று இதுகுறித்து முறையிட்டுள்ளார். ஆனால் நிர்வாகம் அவருக்கு பொறுப்பான பதிலை அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து அவர் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

எல்லாம் காட்டு

3வது முறையாக ஜனநாயகன் படம் பார்க்கும் விஜய்!.. அப்படி என்ன ஃபீலிங்!..

ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

அடுத்த கட்டுரையில்
Show comments