செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (13:48 IST)

அனுராதா விபத்து நடந்த இடத்தில் கொடிக்கம்பமே இல்லை – சாதிக்கும் தமிழக அரசு !

கோவையில் அனுராதா என்ற பெண் அதிமுக கொடிக்கம்பத்தால் விபத்தில் சிக்கி கால்களை இழந்த விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் சொல்லியுள்ளது.

கோவையில் முதல்வரின் வருகையை ஒட்டி, பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அவினாசி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடி கம்பம், அச்சாலையில் ஒரு பெண் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் விழுந்தது. இதனை கண்ட அப்பெண் பைக்கை நிறுத்த முயற்சித்து தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவர் மேலே ஏறியதில் இரு கால்களும் நசுங்கின. மேலும் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததில் மற்றோரு இளைஞரும் காயமடைந்தார். இந்நிலையில் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவரின் இடதுகாலை நேற்று மருத்துவரகள் அகற்றியுள்ளனர். மேலும் வலதுகாலையும் நீக்கவேண்டும் எனவும் ஆனால் அதற்கு 10 நாட்கள் ஆகுமெனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அனுராதா இன்னும் மயக்கம் தெளியவில்லை என சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக நடைபெற்று வரும் வழக்கில் தமிழக் அரசு ‘சம்மந்தப்படட் இடத்தில் எந்த கொடிக்கம்பமும் வைக்கப்படவில்லை. சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு எந்த கட்சிக்கும்  பேனர் மற்றும் கொடிகள் வைக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை ‘ எனத் தெரிவித்துள்ளது.