Daily Horoscope
✕

இந்தோ,தீபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில்,44 வார கால பயிற்சி முடித்து 1084 வீரர்கள் பணிக்கு திரும்பும் மிடுக்கான அணிவகுப்பு!.

Written By J.Durai
Updated: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:59 IST)
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே இந்தோ தீபெத்திய எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 44 வார கால பயிற்சி முடித்த 1084 வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
 
சிவகங்கையை அடுத்துள்ள இலுப்பகுடி கிராமத்தில் இந்தோ தீபெத் எல்கை பாதுகாப்பு படை பயிற்சி மையமானது கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 
 
இதில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு உடல் பயிற்சி, ஆயுதங்கள் கையாளுதல், கள பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் 44 வார காலத்திற்கு அளிக்கப்பட்டு அவர்கள் இந்திய எல்லை பகுதியில் பணிக்கு அனுப்ப படுகின்றனர். இந்நிலையில் இன்று இந்த மையத்தில் 488 பேட்ச் பயிற்சி வீரர்கள் 44 வார கால பயிற்சி முடித்து 1084 வீரர்கள் பணிக்கு திரும்பும் அனிவகுப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பயிற்சி முடித்த வீரர்கள் தேசிய கொடியை ஏந்தி வீர நடை நடந்து சென்றனர். 
 
மேலும் இந்த நிகழ்ச்சியில் பயிற்சி மையத்தின் ஐ.ஜி நிர்பய் சிங் கலந்து கொண்டதுடன் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கினார். பின்னர் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments