செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (17:34 IST)

விண்டோஸ் மென்பொருள் முடக்கம்.! உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து! பயணிகள் தவிப்பு.!!

Flight Cancelled
விண்டோஸ் மென்பொருள் முடக்கத்தால் இதுவரை உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
 
மைக்கரோசாப்ட்டின் சமீபத்திய Crowd Strike அப்டேட் காரணமாக The Blue Scree of death என்ற பிழை ஏற்பட்டுள்ளதாக Microsoft Inc. மைக்ரோசாப்டின் சேவை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவித்துள்ள பதிவில், “எங்கள் Azure பின் தளப் பணியில் ஏற்பட்ட மைய்ய கோளாறு காரணமாக இவ்வளவு பெரிய சிக்னல் பிரச்சனை உண்டாகி இருக்கிறது என்றும், இப்பிரச்சனையை தீர்க்கும் பணியில் முழு முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. 
 
மைக்ரோசாப்ட் மென்பொருளின் உலகளாவிய செயலிழப்பால்  உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா 170, அமெரிக்கா 500, ஜெர்மணி 92, இத்தாலி 45, உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் தவிக்கும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
 
Boarding
இந்திய விமான நிலையங்களில் முன்பதிவு செய்தல் மற்றும் செக்-இன் செய்தல் உள்ளிட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்கள் மானுவன் முறையில் கைமுறையாக பணிகளுக்கு போர்டிங் பாஸ்களை வழங்கி வருகிறது. சென்னையில் இருந்து இயக்கப்படும் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.


சென்னை விமான நிலையத்தில் மென்பொருள் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர் குழு ஈடுபட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மென்பொருள் கோளாறால் விமான நிலையத்தில் பயணிகள் சிரமம் அடைந்தனர். சென்னையில் மாலை 6 மணிக்கு பிறகு புறப்பட வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இணைய கோளாறு சரி செய்யப்பட்டவுடன் வழக்கம்போல் முழு அளவில் விமான சேவைகள் தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.