செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (08:17 IST)

அடுத்த 3 மணி நேரத்தில், 4 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்திய வானிலை ஆய்வு மையம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மழை குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்னும் மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மிதமான அல்லது லேசான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
 
 தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன்  லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மற்ற மாவட்டங்களில் இன்று வறண்ட வானிலை தான் இருக்கும் என்றும் குறிப்பாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva