தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், இதுகுறித்து ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டும் எந்த பதிலும் இல்லையென்றும், குறிப்பிட்டிருந்தார். அத்தோடு இன்று தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியையும் சந்தித்து தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீராக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு, விஜய்யின் அறிக்கை குறித்து பதில அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ”பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று பெண்களின் நிலைமை குறித்து விஜய் பார்த்துவிட்டு வந்து தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றி கூறட்டும்” என பேசியுள்ளார்.
தொடர்ந்து திமுக மேடைகளில் விஜய் விமர்சிக்கப்பட்டு வருவதும், தொடர்ந்து ஆளும் திமுகவிற்கு எதிரான விஜய்யின் நடவடிக்கைகளும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Edit by Prasanth.K