1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (07:55 IST)

இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழகம் தான்: திருவண்ணாமலை கவர்னர் கருத்து..!

இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் தமிழகம்தான் என திருவண்ணாமலைக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.
 
திருவண்ணாமலையில் கிரிவலம் பாதையில் உள்ள தனியார் மண்டபத்தில் சாதுக்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்என் ரவி கலந்து கொண்டார். 
 
அப்போது அவர் பேசிய போது ’பல நாடுகள் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை. ஆனால் இந்தியா ஆன்மீக சக்தியால் உருவாக்கப்பட்டது என்று கூறினார். 
 
கிரிவலம் பாதையில் அசைவ உணவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்த அவர் இந்தியாவிலேயே ஆன்மீக தலைநகரமாக விளங்குவது தமிழகம் தான் என்று கூறினார். 
 
ரிஷிகள் நாயன்மார்கள் தமிழகத்தில் தான் தாங்கள் யார் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தினர் என்றும் ஆர்.என்.ரவி பேசினார்.
 
Edited by Siva