புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 19 மே 2019 (13:06 IST)

ஓடும் ரயிலில் செல்ஃபி மோகம்! உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

ராமேஸ்வரம் தீவையும் - மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்துவருவது ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.
இந்த இணைப்பு பாலம் அமைக்கப்பட்டு 104 ஆண்டுகள் ஆகிவிட்டது.ஆனால்  பல இயற்கை சீற்றங்களைக் கடந்து கெம்பீரமாக நிற்கும் இப் பாலத்தில், சமீபகாலமாகவே அதிகமான மரணங்கள் செல்பியால் நிகழ்கின்றன என்ற தகவல்  பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
இங்குவரும் சுற்றுலாபயணிகள் ,இங்குள்ள இயற்கை அழகைக் கண்டுரசிக்க மறப்பதில்லை.மேலும் பலரும் ரயிலில் படியில் நின்று செஃல்ஃபி எடுப்பதுதான் பல்வேறு விபத்துகள் நிகழக் காரணாக அமைகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதவாது கடந்த 3 வருடங்களில் மட்டும் இங்கு 30 க்கும் மேற்பட்டோர் இந்த செஃபி மோகத்தால் பலியாகியுள்ளதாகவும். பலர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
முன்னர் அதிக அளவில் தற்கொலைகள் நடந்துவந்த நிலையில் சமீபகாலமாக மக்கள் அதிக அளைவில் செல்ஃப்இ மோகத்தில் பலியாவது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் செபி மோகத்தில் பலர் பலியாவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.