வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (09:44 IST)

வி.வி.மினரல்ஸ் அலுவலகத்தில் வருமான வரி சோதனை: பெரும் பரபரப்பு

சென்னை, நெல்லை மற்றும் தூத்துகுடியில் உள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவி மினரல்ஸ் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகார் வருமான வரி அலுவலகத்திற்கு வந்ததை அடுத்து இன்று காலை முதல் அந்நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு வருகிறது. 

குறிப்பாக வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது மகனின் வீடு மற்றும் அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, திசையன்விளை போன்ற இடங்களில் அதிகாரிகள் தனித்தனி குழுவாக சென்று சோதனை நடத்தி வருவதாகவும், சோதனைக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளிவரும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன