திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 அக்டோபர் 2018 (15:04 IST)

அமைச்சர் வீடுகளில் ரெய்டு...ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த சோதனை...

தலைநகர் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
சென்ற வருடத்தில் பல பிரச்சனைகளை சந்தித்த கெஜ்ரிவால் எதற்கும் அசராமல் தன் ஆட்சியில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்நிலையில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சரின்  வீடுகள் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற 16 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
 
இதில் குறிப்பாக போக்குவரத்து, சட்டம் வருவாய் துறை அமைச்சராக இருப்பவரான கைலாஷ் கெலாட் மீது வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து டில்லி, ஹர்யானா போன்ற நகரங்களில் அவர்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துரையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
 
இதில் சில முக்கியமான  ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
 
இது பற்றி அரவிந் கெஜ்ரிவால் கூறும்போது: இது நரேந்திரமோடி தலைமையிலான பிஜேபி ஆட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார்.