செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மே 2024 (14:38 IST)

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

நாமக்கல் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் திடீரென வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கல்லூரிகள் மற்றும் சில இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பதும் 24 மணி நேரமும் சிசிடிவி பாதுகாப்பு கேமராக்கள் செயல்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் நாமக்கல் எளையாம்பாளையம் என்ற பகுதியில் வாக்குப்பதிவு வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் திடீரென வருமானவரி சோதனை செய்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
அந்த கல்லூரி நிர்வாகம் செய்த வரியைப்பு புகார் காரணமாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் வருமானவரி சோதனை செய்வது ஏன் என்றும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு சோதனை செய்திருக்கலாமே என்றும் அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Siva