ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2023 (10:38 IST)

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடரும் சோதனை.. கரூரிலும் சோதனை நடப்பதால் பரபரப்பு..!

E V Velu
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் இதன் தொடர் தொடர்பாக கரூரில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

திமுக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திடீரென வருமானவரித்துறை நடத்தினர். அதுமட்டுமின்றி அவருக்கு நெருக்கமான இடங்கள் மற்றும் சில முன்னணி கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை தொடர்ந்தது. சென்னையில் உள்ள அபிராமி திரையரங்கு உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு மேல் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடந்து வரும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக கரூர் மாவட்டத்தில் இன்று முதல் நான்கு இடங்களில் சோதனை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்கள் இந்த சோதனை தொடரும் என்பதால் இந்த சோதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Edited by Mahendran