1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2017 (21:40 IST)

விசாரணை பிடியில் விவேக்: கைது நடவடிக்கை எடுக்கப்படுமா??

சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என கடந்த 5 நாட்களாக நீடித்த வருமான வரி சோதனை தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.


 
 
ஜெயா தொலைக்காட்சி, தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் என 215 இடங்களில்  வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக அதிரடி சோதனை செய்து வந்தனர். 
 
சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் தொடர்பாக குறுக்கு விசாரணைதான் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஆவணங்களின் உண்மைதன்மை பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடக்கிறது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவி சிஇஓ விவேக் இல்லத்தில் சோதனை நிறைவு பெற்ற பின்னர், விவேக்கிற்கு அங்கேயே சம்மன் வழங்கி விசாரணைக்காக வருமானவரி துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவா் சிவக்குமார், விவேக் ஜெயராமன் என மூன்று பேரையும் ஒரே இடத்தில் வைத்து வருமான வரித்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
 
இவா்கள் மூன்று பேரிடமும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னர் ஆவணங்களுக்கு சரியான பதில் அளிக்கபடவில்லை எனில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.