1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2017 (12:29 IST)

டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள்: கடும் நெருக்கடியில் விவேக்!

டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள்: கடும் நெருக்கடியில் விவேக்!

வருமான வரித்துறை சசிகலா குடும்பத்தை குறி வைத்து நடத்தி வரும் சோதனையில் ஹிட் லிஸ்ட்டில் இருப்பது இளவரசியின் மகன் விவேக் தான். கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பேசும் பொருளாக இருக்கும் விவேக்கின் சொத்து மதிப்பை பார்த்து டெல்லி அதிர்ச்சியில் உள்ளது.


 
 
சுமார் 80 மணி நேரம் விவேக் வீட்டில் சோதனையை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் விவேக் வீட்டில் இருந்து பல்வேறு சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். நான்காம் நாள் விவேக் வீட்டில் நடந்த சோதனைக்கு வருமான வரித்துறையின் துணை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என ஆறு அதிகாரிகள் வந்து விவகாரத்தை சூடுபிடிக்க வைத்துள்ளனர்.
 
நான்கு நாட்கள் விவேக் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் சொத்து மதிப்பு 1500 கோடி ரூபாய் என உத்தேசமாக கூறப்படுகிறது. அதன் பிறகே டெல்லியில் இருந்து அதிகாரிகள் விவேக் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்த 1500 கோடி ரூபாய் முதலீட்டுக்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்பது தான் விவேக்கிடம் அதிகாரிகள் எழுப்பும் மிக முக்கியமான ஒற்றை கேள்வி.
 
விவேக் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் வருமான வரித்துறையின் பிடியில் வசமாக சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் தினகரன் பத்திரிகையாளர்களிடம், என்னைப் பற்றி என்னிடம் கேளுங்கள். என் உறவினர்கள் வீட்டில் என்ன இருக்கிறது என்பதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது என கூறினார் என பேசப்படுகிறது.