1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 9 நவம்பர் 2017 (07:46 IST)

தினகரன் ஆதரவாளர் புகழேந்தியின் பெங்களூர் வீட்டிலும் ரெய்டு

சென்னையில் இன்று காலை 6 மணி முதல் ஜெயா டிவி அலுவலகத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஜெயா டிவியை நிர்வகித்து வரும் விவேக் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.


 


இந்த நிலையில் தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தியின் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் விவேக் நிர்வகித்து வரும் ஜாஸ் சினிமா அலுவலகம், கீழதிருப்பாலக்குடியில் உள்ள திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீடு உள்பட சசிகலாவுக்கு சம்பந்தப்பட்ட வேறு சில இடங்களிலும் சோதனை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அதுமட்டுமின்றி தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சசிகலா பரோலில் சென்னை வந்தபோது இவரது வீட்டில்தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.