திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (23:45 IST)

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் உரிய பட்டா வழங்க வேண்டும் – கமல்ஹாசன்

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு  உரிய பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்றுவது ஏற்புடையதல்ல. அங்கு காலம் காலமாக வசித்துவரும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய பட்டா வழங்க ஆவன செய்யவேண்டும்.