Daily Horoscope
✕

சென்னை: சேத்துப்பட்டில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

Updated: புதன், 30 மே 2018 (18:26 IST)
சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சேத்துப்பட்டு ஸ்பர்டங் சாலையில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் இன்று மாலை இடிந்து விழுந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்த 3 பேரும் கட்டிட பணியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள் என கூறப்படுகிறது.
 
மேலும், சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்க மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எல்லாம் காட்டு

இடைத்தேர்தலில் வெற்றி!. உடனே அன்புமணிக்கு போட்ட முதல்வர் விஜய்!...

ஒப்போ அறிமுகம் செய்யும் ஃபைண்ட் X10 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..

டெல்லியில் நாளை கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி போராட்டம்.. மெட்ரோ ரயில்கள் ரத்து...

டிரம்புக்கு மீண்டும் ஏமாற்றம்.. தமிழ் பெண்ணுக்கு கிடைத்தது அமைதிக்கான நோபல் பரிசு..

மே மாதம் 81,100 வாக்குகள், தற்போது 35,411 மட்டுமே.. தாராபுரம் அதிமுக கோட்டையா இல்லை ஓட்டையா?

அடுத்த கட்டுரையில்
Show comments