புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2025 (14:28 IST)

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

bottles
காலி மது பாட்டில் பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்துவது எப்போது என்ற தகவலை தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி, காலி மது பாட்டில்  டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு முடிவு செய்தது. இந்த திட்டம் தற்போது 9 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது. இங்கு கொடுக்கப்படும் பாட்டில்களுக்கு பத்து ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக சேகரிக்கப்படும் என்றும், இந்த பணிக்கு தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரி உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் கடைகள் மூலம் மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

Edited by Mahendran