வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (12:58 IST)

கள்ளக்காதல் விபரீதம் - அந்த நேரத்தில் கணவன் பார்த்ததால் அவமானத்தில் மனைவி தற்கொலை

திருப்பூரில் கள்ளக்காதலனுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கணவன் பார்த்துவிட்டதால், மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார், இவர் தன் மனைவி பாண்டிச்செல்வியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார். அசோக்குமார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு குழந்தை இருக்கிறது.
 
பாண்டிச்செல்விக்கு திருமணம் ஆகாததற்கு முன்பே பாண்டியராஜன் என்ற ஒரு இளைஞருடன் பழக்கம் இருந்துள்ளது. பின் அசோக்கை திருமணம் செய்துகொண்டார்.
 
திருமணம் ஆனபோதிலும், பாண்டிச்செல்வி பாண்டியராஜனுடன் தொடர்பில் இருந்துள்ளார். பாண்டியராஜனை தன் வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று பாண்டிச்செல்வி பாண்டியராஜனுடன் உல்லாசமாக இருந்ததை அசோக்குமார் நேரடியாக பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பாண்டியராஜனை சரமாரியாக அடித்து அவனை போலீஸில் ஒப்படைக்க முயன்றார்.
 
இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்றும் இதனை இப்படியே விட்டுவிடும் படியும் பாண்டிச்செல்வி கணவனிடம் மன்றாடி கேட்டுள்ளார். ஆனால் இதனை கேட்காத அசோக் பாண்டியராஜனை வெளியே இழுத்துச் சென்றார்.
 
ஏற்கனவே உல்லாசமாக இருந்ததை கணவன் பார்த்துவிட்ட அவமானத்தில் இருந்த பாண்டிச்செல்வி, இந்த விஷயம் போலீஸுக்கு போனால் இன்னும் மானம் போய்விடும் என்பதால், 3-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதனால் அதிர்ந்துபோன அசோக் மனைவியின் உடலைபார்த்து கதறி அழுதார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பாண்டிச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாண்டியராஜனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.