திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 28 ஜூலை 2018 (19:05 IST)

மோடியிடம் ஆட்டோகிராப் - பேமஸ் ஆன மாணவியை திருமணம் செய்ய போட்டி

பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் வாங்கிய மாணவிக்கு திருமண வரன்கள் குவிகிறது.
கடந்த 16 ந் தேதி மேற்கு வங்கத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது எதிர்பாராதவிதமாக பந்தல் சரிந்து விழுந்தது. இதனால் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
 
நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்கு சென்ற மோடி, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது காயமடைந்த கல்லூரி மாணவி ரிடாமுடி(19), என்பவர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்டார். உடனடியாக மோடி அவருக்கு ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்.
இதனால் ரிடா பயங்கர பேமஸ் ஆனார். அவருக்கு திருமண வரன்கள் குவிந்து வருகிறது. ஆனாலும் படிப்பு முடிந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என ரிடா தெரிவித்துள்ளார்.