புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:28 IST)

பாஜகவின் மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் தொண்டர்கள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் அதே நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த போதிலும் இன்னொரு பக்கம் மத்திய மாநில அரசுகள் ஏகப்பட்ட தளர்வுகளை அறிவித்துள்ளதால் கொரோனா வைரஸ் மேலும் பரவும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பல முக்கிய அரசியல் தலைவர்கள் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் அதிலிருந்து விடுபட்டு வீடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதே போல் தமிழகத்திலும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் என கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான இல கணேசன் அவர்களுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்