பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார். கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உழவன் மகன், கேப்டன் பிரபாகரன், பூந்தோட்டக் காவல்காரன், புலன் விசாரணை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக புரியாத ஆனந்தம் புதிதாய் ஆரம்பம் என்ற படத்தை தயாரித்தார்.
தமிழ் திரைப்பட சங்க தலைவராகவும் பதவி வகித்தார். அவரது உடல் சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ’ராவுத்தர் பிலிம்ஸ்’ அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என இப்ராகிம் ராவுத்தரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.