வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 9 மார்ச் 2019 (12:10 IST)

'நான் அவன் இல்லை' பிளாஸ்டிக் சர்ஜரி! முறுக்கு மீசை... லண்டனில் நீரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி  கடன் வாங்கி மோசடி செய்து  வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் வைரவியாபாரி நீரவ் மோடி.



நீரவ் மோடி தப்பிச் சென்ற பிறகு போலீசுக்கு மோசடி விவகாரம் தெரிய வந்தது . இந்நிலையில்  அமலாக்கத்துறை  நிரவ் மோடியை தேடி வருகிறது. நீரவ் மோடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, முரட்டு மீசையை வளர்த்துக் கொண்டு லண்டனில் வைர வியாபாரம் செய்து வருகிறார். இந்த செய்தியை பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் வெளியிட்டு உள்ளது.
 
லண்டனில் நிரவ் மோடி, புதிதாக வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதுடன், தாம் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே அலுவலகமும் வைத்துள்ளதாகவும் டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது. நிரவ் மோடி வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாடகை மாதத்திற்கு 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்  என டெய்லி டெலிகிராஃப் கூறியுள்ளது.