புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (12:36 IST)

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நான் பங்கேற்கமாட்டேன் - பகிரங்க முடிவெடுத்த கமல்!

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பங்கேற்கமாட்டேன்  என்று அதிரடியாக அறிவித்துள்ளார். 


 
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் ஹாசன் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என கமல் கடைசி நேரத்தில் தடாலடியாக அறிவித்துவிட்டார்.
 
காரணம்:
 
கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு செல்ல முன்னரே ஏற்பாடுகள் செய்து விட்டதால் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
கொடைக்கானலில் கஜா புயல் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மாலை அங்கு புறப்பட்டு செல்கிறார்.
 
இதுகுறித்து தெரிவித்துள்ள கமல், " திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் என்னால் கலந்துகொள்ளமுடியவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இப்போது செல்கிறேன். கருணாநிதியின் மீது எப்போதுமே என்றைக்குமே எனக்கு மரியாதை உண்டு. இருந்தாலும் ஏற்கெனவே நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டதால் செல்லவேண்டிய நிலை. அதனால்தான் சிலை திறப்பு விழாவுக்கு வருவேன் என்று சொல்லவே இல்லை.
 
ஸ்டெர்லைட் விஷயத்தில் எந்த அரசாக இருந்தாலும் மக்களை மதித்து நடக்கவேண்டும். தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஸ்டெர்லைட் பற்றிய கருத்தும் முடிவும் ஏற்புடையதாக இல்லை. இந்தத் தீர்ப்பில் உடன்பாடில்லை" என்றார் கமல் .