புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (15:25 IST)

அரசியலால் விஜயகாந்தின் நட்பை இழந்தேன்: குமுறிய டி.ராஜேந்தர்

அரசியலில் ஏற்பட்ட சில கருத்துவேறுபாட்டால், என் நெருங்கிய நண்பரான விஜயகாந்தின் நட்பை இழந்துவிட்டேன் என டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
 
நடிகர்களின் அரசியல் வருகை குறித்து பேசிய டி.ராஜேந்தர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்கு விதிவிலக்கு இல்லை. அரசியலுக்கு புகும் நடிகர்கள் மக்களின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும், இதனால் அவர்கள் பலவற்றை இழக்க நேரிடலாம்.
 
அரசியலில் நுழைந்த பிறகு, விஜயகாந்த் என்னை விமர்சித்து பேசியதாக கேள்விபட்டேன். அதனை முழுமையாக விசாரிக்காமல் பதிலுக்கு அவரை நான் கடுமையாக விமர்சித்து பேசினேன். அதனால் என் நெருங்கிய நண்பரான விஜயகாந்தின் நட்பை இழந்துவிட்டேன். ஆகவே அரசியலுக்கு வரும் நடிகர்கள் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும் என டி.ராஜேந்தர் உருக்கமாக கூறியுள்ளார்.