ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:13 IST)

இனிமேல் அடல்ட் படங்களில் நடிக்கமாட்டேன் - யாஷிகா அதிரடி முடிவு

பிக் பாஸ் சீசன்-2வில் கலந்து கொள்வதற்காக நோட்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கூட வேண்டாம் என்று இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி  யாஷிகா கூறிவிட்டாராம்.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற "அடல்ட்" படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா. இப்படத்தைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனுக்ககான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருந்த யாஷிகா, பிறகு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தால் நோட்டா படத்தில் வெறும் 3 காட்சிகளில் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு ஓடிவிட்டாராம். 
 
நோட்டா படத்தில் யாஷிகாவிற்கு ஒரு பெரிய ரோல் தான் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை நிராகரித்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம்.
 இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமான அவர் இனிமேல், இது போன்ற படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து திருட்டுப் பெண், விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண், புற்று நோயாளி என்று விதவிதமான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க ஆசையிருக்கிறதாம். அரசியல் படங்களில் நடிக்க ஆசையிருக்கிறதாம். தனது உண்மையான முகத்தை காட்டவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்து கொண்டதாக யாஷிகா கூறியுள்ளார்.