வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (14:50 IST)

என்னது வீடுகளுக்கு மதுபான விற்பனையா...? மகாராஷ்டிர அரசின் நிலைப்பாடு என்ன...?

வட மாநிலமான மகாராஷ்டிராவில் நாளாக ஆக மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதுமட்டுமில்லாமல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிக விபத்தும் ஏற்படுகிறது.
இதனால் பார்களில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்லும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்பதற்காக மகாராஷ்டிர மாநில அரசே மதுபானங்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப் போவதாக  செய்திகள் வெளியானது.
 
இது குறித்த உறுதியான அறிவிப்புகள் எதுவும் அம்மாநில அரசுகள் வெளியிடவில்லை. இருப்பினும் இதுகுறித்த மகாரஷ்டிர அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
மது உடல் நலத்துக்கு தீங்கு என்று   அரசு விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வந்தாலும்,இந்த குடியை அரசே ஊக்குவிப்பதுபோல  வீடுகளுக்கே சென்று மது விநியோகம் செய்வது இன்னும் சமுதாயத்தில் அதிக தீங்குவிளைவிப்பதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.