புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (19:30 IST)

" நடிப்பதற்காக தான் நான் வந்தேன், அரசியல் செய்ய இல்லை" - நடிகர் அஜித் அறிக்கை!

அரசியலில் வரும் எண்ணம் எனக்கு இல்லை , என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்று நடிகர் அஜித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


 
நடிகர் அஜித் தனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என கூறி சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 
 
தனிப்பட்ட முறையியோ அல்லது என்னுடைய தொழிலான சினிமாவில் நடிப்பதிலோ அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று தீர்மானத்தோடு இருக்கிறேன். ஒரு சராசரி மனிதனாக வரிசையில் நின்று வாக்களிப்பதே என்னுடைய உச்சகட்ட அரசியல் 
 
மேலும் கூறிய அவர், "நான் சினிமாவில் நடிப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன் , மாறாக அரசியல் செய்யவோ மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை" என் ரசிகர்களிடமும் அதையே நான் வலியுறுத்தியுள்ளேன். அவர்களும் அவ்வாறே இருக்க விரும்புகிறேன்.


ன் ரசிகர்களாகிய உங்களுக்கு நான் சொல்வது ஒன்று மட்டும் தான் மாணவர்கள் உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள் , உங்கள் தொழிலில் முன்னேற வழிவகை செய்யுங்கள் அது தான் நீங்கள் எனக்கு செய்யும் அன்பு "வாழு வாழ விடு " என அந்த அறிக்கையில் அஜித் தெரிவித்துள்ளார்.