தோல்வி அடைந்து விட்டேன் என பேசினாலும் கவலை இல்லை..! சரத்குமார்..!!
என் பயணத்தில் நான் தோல்வி அடைந்து விட்டேன் என பிறர் பலவிதமாக பேசினாலும் கவலை இல்லை என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் நேற்று இணைத்தார். இந்த முடிவு அவருடைய கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், பல்வேறு தரப்பினரும் சரத்குமாருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய சரத்குமார், தேர்தல் வரும்போது எல்லாம் கூட்டணி என்ற பேச்சு தான் மேலோங்கி நிற்கிறது என்பதை மறக்க முடியாது என தெரிவித்தார்.
பதவி இருந்தால்தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மைதான் என குறிப்பிட்ட சரத்குமார், கூட்டணி பேச்சும் அதற்கு மட்டும்தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் அமைதியை இழக்க செய்தது என்று கூறியுள்ளார்.
என் பயணத்தில் நான் தோல்வி அடைந்து விட்டேன் என பிறர் பலவிதமாக பேசினாலும் கவலை இல்லை என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் குறைந்து பணநாயகம் மேலோங்கி அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.