1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (13:00 IST)

பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்தில் மனைவி உயிரிழப்பு: சோகத்தில் கணவர் தற்கொலை!

suicide
பிரியாணி சாப்பிட்ட சில நிமிடங்களில் மனைவி உயிரிழந்த நிலையில் அந்த சோகத்தில் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை அயனாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த 53 வயது தம்புசாமி மற்றும் அவரது 47 மனைவி பவானி ஆகியோர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று அங்கு பிரியாணி சாப்பிடனர்.
 
இதனை அடுத்து அவர்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு காரணமாக பவானி உயிரிழந்தார். இதனால் சோகத்தில் இருந்த அவரது கணவர் தம்புசாமி, மனைவியின் இறுதிச் சடங்கிற்கு முன்பே திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
தம்புசாமி - பவானி தம்பதிக்கு யுவஸ்ரீ என்ற 22 வயது மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran