திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (09:24 IST)

துருக்கியில் தற்கொலைப்படை தாக்குதல்; இந்த அமைப்பின் சதி வேலையா?

Turkey Bombing
துருக்கி நாட்டின் இஸ்தான்புலில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டின் முக்கியமான பகுதியும், சுற்றுலா தளமுமான இஸ்தான்புலில் உள்ள  இஸ்திக்லால் கடைவீதியில் நேற்று மாலை திடீரென நடந்த தற்கொலைப்படை குண்டு வெடிப்பு தாக்குதலில் 6 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். 80க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் குர்திஸ்தான் போராளிகள் நடத்தி இருக்கலாம் என உள்துறை அமைச்சர் சுலேமான் சொய்லு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஏற்கனவே இஸ்தான்புலில் கடந்த 2015, 2017ம் ஆண்டுகளில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K