திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 29 ஜனவரி 2020 (20:44 IST)

சமூக வலைதளத்தில் மூழ்கிய மனைவியை கொன்ற கணவன் !

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹருசிங் அருகே  சமூக வலைதளத்தில் சமூக வலைதளத்தில் மூழ்கியிருந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் வசித்து வருபவர் சர்புதீன். இவர் மனைவி ஜான் ஜெனக், இந்த தம்பதியர்க்கு ஒரு மகள் உள்ளார் .
 
இந்நிலையில், ஜாஜெனக் தன் வீட்டு வேலைகள் போக மீதமுள்ள நேரங்களில்  சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது ஒரு இளைஞருடன் அவருக்கு  நட்பு ஏற்பட்டுள்ளது.
 
அதன்பின், கணவர் பலமுறை ஜான் ஜெனக்கை கண்டித்துள்ளார்.   ஆனால் அவர் தொடர்ந்து இளைஞருடன் பேசி வந்துள்ளார்.
 
அதனால் கோபம் அடைந்த சர்புதீன் ஜான் ஜெனக்குடன்  அடிக்கடி சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதல் முற்றிய நிலையில்  தனது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து  மனைவி்யை குத்திவிட்டார்.
 
அதன்பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சார்புதீனை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.