1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (13:33 IST)

கணவரின் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் மரணம்: சாவிலும் இணைபிரியாத தம்பதி!

கணவரின் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் மரணம்
கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் இன்று அதிகாலை மரணம் அடைந்ததை அடுத்து கணவரின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் மனைவியும் மயங்கி விழுந்து மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
 
கோவையை சேர்ந்த தொண்டாமுத்தூர் என்ற பகுதியில் வசித்து வந்த 70 வயது ராமமூர்த்தி என்பவர் இன்று திடீரென மரணம் அடைந்தார். இந்த செய்தியை கேட்ட அவரது 65 வயது மனைவி சரோஜினி என்பவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை உறவினர்கள் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
கணவர் இறந்த செய்தி கேட்டு ஒரு சில நிமிடங்களில் மனைவியும் இறந்ததை அடுத்து அவர்கள் இருவருக்கும் உள்ள பாசப்பிணைப்பை பார்த்து அவரது உறவினர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர். இதனை அடுத்து கணவன் மனைவி ஆகிய இருவரையும் ஒரே மின்மயானத்தில் தகனம் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது