ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (17:11 IST)

உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ட்ரோன்: புதிய சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்!

drones
தற்போது உடல் தானம் செய்தவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் இந்த வாகனங்கள் செல்லும் போது பெருமளவில் போக்குவரத்தை சரி செய்யப்படுவதும் மக்களுக்கு சிக்கல் ஏற்படுவதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் உடல் உறுப்புகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.  இந்த சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். 
 
சென்னையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரோன் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது
 
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் உயிர்காக்கும் சேவையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் தமிழக அமைச்சர் சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.