வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:35 IST)

இந்தியாவில் 2030-க்குள் 6ஜி சேவை !!!

6ஜி சேவைக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை தொடங்கும் என அறிவிப்பு.


நாட்டில் 5ஜி சேவை தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 6ஜி சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 -ன் கிராண்ட் பைனலில் உரையாற்றியபோது பிரதமர் இதனை அறிவித்தார்.

விவசாயம் மற்றும் சுகாதாரத் துறையில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இளைஞர்கள் புதிய தீர்வுகளை உருவாக்க முடியும். இந்த பத்தாண்டுகளின் இறுதிக்குள் 6ஜியை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறோம். கேமிங் மற்றும் கேளிக்கைகளில் இந்திய தீர்வுகளை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. அரசாங்கத்தின் வழி முதலீடு செய்வதை, இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும் மலிவு மற்றும் அணுகக்கூடிய வகையில் அரசாங்கம் கூறும் 5G தொழில்நுட்பத்தின் வெளியீட்டை இந்தியா காண உள்ளது. ஆக்டோபர் இரண்டாவது வாரத்தில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6ஜி சேவைக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் 2030 ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.