1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 மார்ச் 2020 (15:29 IST)

ரீடிங் எடுக்காம எப்படி கரெண்ட் பில் கட்ட..?

ரீடிங் எடுக்காதவர்கள் எப்படி கரெண்ட் பில் செலுத்த வேண்டும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாடு மின்சார வாரியம் மார்ச் மாதத்துக்குள் செலுத்தப்பட வேண்டிய மின்கட்டணம் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை கட்டலாம் என அறிவித்துள்ளது. மின் கட்டணம் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை என்றாலும் மின் இணைப்புத் துண்டிக்கப்படாது எனவும் உறுதியளித்துள்ளது. 
 
ஆனால், கடந்த 22 ஆதி முதல் ஏப்ரல் 14 வரை மீட்டர் ரீடிங் எடுக்க முடியாத சூழல் உருவாகியது. எனவே ரீடிங் எடுக்காதவர்கள் எப்படி கரெண்ட் பில் செலுத்த வேண்டும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. 
 
அதாவது, ஜனவரி - பிப்ரவரியில் செலுத்திய மின் கட்டணத்தையே மார்ச்-ஏப்ரல் மாதத்திற்கு செலுத்தலாம். அப்படி, இதி ஏதேனும் ஏற்ற தாழ்வு இருந்தால் அது மே-ஜூன் மாத கட்டணத்தில் கழிக்கப்படும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.