1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 ஜூன் 2020 (13:47 IST)

கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து: சென்னை மாநகராட்சி

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்துவதற்கான போதிய இடம் இல்லாததால் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் சமீபத்தில் சென்னை மாநகராட்சி அறிவித்தது 
 
இந்த நிலையில் சென்னையில் கொரோனா அறிகுறி உடையவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் 
 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, பணிக்கு திரும்புபவர்களை பணியமர்த்த மறுப்பதும், உடல் தகுதி சான்றிதழ்  கேட்பதும் சட்டப்படி தவறு என்றும் அவ்வாறு பணியமர்த்த மறுக்கும் நிறுவனங்கள் குறித்து முறையாக புகார் வந்தால், அந்த நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.