Daily Horoscope

3 பேரை கொடூரமாக கடித்த குதிரை சில நிமிடத்தில் ரத்தம் கக்கி பலி: கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Written By Mahendran
Updated: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (11:26 IST)
கடலூர் அருகே மூன்று பேர்களை கொடூரமாக கடித்த குதிரை ஒன்று திடீரென ரத்தம் கக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் என்ற பகுதியில் லோகேஸ்வரன் என்ற சிறுவனை தெருவில் சென்று கொண்டிருந்த குதிரை திடீரென விரட்டி கடித்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த மேலும் இரண்டு பெண்களையும் குதிரை கடித்து உள்ளது. 
 
இதனால் படுகாயம் அடைந்த மூன்று பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குதிரையை பொதுமக்கள் துரத்தி சென்ற போது திடீரென குதிரை ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்தது. 
குதிரையை கயிற்றால் பொதுமக்கள் கட்டி போட்ட நிலையில் சிறிது நேரத்தில் ரத்தம் கக்கி உயிரிழந்தது. இது தொடர்பாக குதிரையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments