1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (16:57 IST)

மதுரை ஆதீனமாக மீண்டும் நித்யனந்தா: இந்து மக்கள் கட்சி ஆதரவு!

மதுரை ஆதீனமாக மீண்டும் நித்யனந்தா: இந்து மக்கள் கட்சி ஆதரவு!

மதுரை ஆதினமடத்தின் இளைஞ ஆதீனமாக நித்யானந்தாவை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 2012-ஆம் ஆண்டு நியமித்தார். ஆனால் இதற்கு இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அருணகிரிநாதன் நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்தார்.


 
 
இந்நிலையில் கடந்த வருடம் பிள்ளையார்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை இளைய ஆதீனமாக அறிவித்தார் அருணகிரிநாதர். இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும் அது அந்த அளவுக்கு பெரிதாக இல்லாமல் உடனே அடங்கியது. இதனை எதிர்த்து நித்தியானந்தா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 
இந்நிலையில் நித்தியானந்தாவுக்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்த இந்து மக்கள் கட்சி தற்போது நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கு எதிர்ப்பும் நித்தியானந்தாவுக்கு ஆதரவும் தெரிவிக்கின்றது.
 
தற்போது நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு என்பவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டவர், எந்தவொரு மடத்திலும் தங்கியிருந்து சைவத்திருமறைகள் கற்றவரில்லை. முறையான ஆன்மீகப் பயிற்சி எடுத்தவரில்லை. ஜாலியாக வாழ்ந்தவர். இதற்கு நித்தியானந்தாவே இளைய ஆதீனமாக இருந்துவிடலாம் என இந்து மக்கள் கட்சியினர் கூறுகின்றனர்.
 
அதே நேரத்தில் நித்தியானந்தா தமிழகத்தில் நடக்கும் மதமாற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். பன்றிக்குப் பூணூல்போடும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்தவுடன், பன்றிக்குக் கறுப்புச்சட்டை போடுவோம் என்று அறிவித்தவர் நித்யானந்தா. இந்து மதத்தைப் பாதுகாக்கத் துணிச்சலாகப் பேசும் நித்யானந்தா போன்றவர்தான் ஆதீனமாக இருக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் குரல் கொடுக்கின்றனர்.