வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (16:28 IST)

”மெரினாவை உலகத் தரம் ஆக்கவேண்டும்.. “ நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத் தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை ஆகும். இந்த கடற்கரையை காண உலகில் இருந்து பல சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். ஆனால் மெரினா கடற்கரை அசுத்தமாகவும் குப்பையாகவும் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

இந்நிலையில் மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது குறித்து டிசம்பர் 13க்குள் பதில் தர மாநகராட்சி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.